கண்ணப்பன் நாச்சியப்பன் 
காமிரா கண்கள்

கண்ணப்பன் நாச்சியப்பன்

Staff Writer

எதிலுமே அவ்வளவா ஆர்வம் இல்லாத எனக்கு புகைப்படக்கலை மேல ஆர்வம் வர காரணம் சமநீதி கிருஷ்ணன். அவர்  எடுத்த புகைப்படங்கள் பார்த்து மொபைல், டிஜிட்டல் கேமரால எடுத்து பழக ஆரம்பிச்சது. பல வருடமா இருந்த டி.எஸ்.எல்.ஆர் கனவ நிறைவேற்றி வச்சது எங்க அண்ணன். self learning தான். இன்னும் அதிகமா ஆர்வம் அதிகமாக காரணம் நவீன் கவுதம் அண்ணாவும் அவரோட Square Stories-ம் தான். திரும்ப மொபைல்ல புகைப்படம் எடுக்க ஆரம்பிக்க வச்சதும் இந்த Square Stories தான். இப்போ ஒரு வருடமா பார்க்கிற வேலையால ஏற்படுற டென்ஷன், உளைச்சல் போக்க ஒரு வடிகாலா இருக்கறது இதுதான். Abstracts எடுக்கப் பிடிக்கும். பிடிக்காதது Portraits, ஏன்னா மனிதர்கள்ன்னாலே கொஞ்சம் பயம். ஆனாலும் அப்பப்போ ஒண்ணு ரெண்டு எடுக்கிறதுண்டு. மத்தவங்களுக்குப் பிடிக்கிற மாதிரி புகைப்படம் எடுத்துட்டு இருக்கேனான்னு தெரியல, ஆனால் எனக்கு பிடிச்சிருக்கு. எடுத்துட்டு இருக்கேன். எடுப்பேன்.

ஏப்ரல், 2018.